தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே சந்திரகிரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை ஒட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறிப்பாய்ந்த காளை வண்டிகளை இருபுறமும் கூடியிருந்த மக்கள் கண்டு ரசித்தனர். பந்தயத்தில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.