திருச்சி சிறையில் ஐடிஐ மாணவர் ஹரிஹரசுதனை சிறைத்துறை அதிகாரிகள் தாக்கிய விவகாரத்தில், மாணவரின் தாயார் அளித்த புகார், மாணவர் மீது ஜெயிலர் அளித்த புகார் என இரண்டையும் சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்விரோதம் காரணமாக ஜெயிலர் மணிகண்டனின் பெயரை கெடுக்கும் நோக்கில் ஹரிஹரசுதன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.