அரசை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, மக்களை தேடி அரசு என்பதை நிறைவேற்றியது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி என அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், ஆயிரத்து 59 பயனாளிக்கு 10 கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மேடையில் பேசிய அமைச்சர் காந்தி, மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைத்த 100 நாட்களில் தீர்வு கண்டவர் முதலமைச்சர் என தெரிவித்தார்.