மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என சிறுத்தையாக சீறிய விசிக தலைவர் திருமாவளவன், அறிவாலயம் வந்து சென்ற பின்னர் சிறுத்துபோய் விட்டார் என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்து விமர்சித்திருந்த நிலையில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.