திருவண்ணாமலை... மேள தாளத்துடன் சென்று கொண்டிருந்த இறுதி ஊர்வலம். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஊர் நாட்டாமையை அடித்தே கொன்ற இளைஞர்கள். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நாட்டாமையை பார்த்து குலைநடுங்கிய கிராம மக்கள். நாட்டாமையை அடித்தே கொன்ற இளைஞர்கள் யார்? அடித்து கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன ஆத்திரம்? பின்னணி என்ன?ரோட்டுல ஏகப்பட்ட வண்டிங்க போயிட்டு இருந்துருக்கு. மக்கள் சிலர் நடந்து போயிட்டு இருந்துருக்காங்க. அப்போ, அந்த வழியில, மேள தாளத்தோட இறுதி ஊர்வலமும் போயிட்டு இருக்க, கொஞ்ச நேரத்துலேயே அந்த இடம் போர் களம் மாதிரி ஆகிருக்குது. ஏன்னா, இறுதி ஊர்வலத்துல இருந்த சஞ்சையும் அவரோட நண்பர்களும் சேந்து அந்த ஊர் நாட்டாமை சுதாகர கட்டையால வெறித்தனமா தாக்கிருக்காங்க. இந்த கொடூர தாக்குதல பாத்து மக்கள் எல்லாரும் நாலாபுறமும் சிதறியடிச்சு ஓடிருக்காங்க. அதுக்கப்புறம், விஷயம் தெரிஞ்சு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, ரத்த வெள்ளத்துல கிடந்த சுதாகர மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. அங்க சுதாகர பரிசோதனை பண்ண மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. அதுக்குப்பிறகு, அடிதடி கேஸ கொலை கேஸா ஃபைல் பண்ண போலீஸ்காரங்க, தாக்குதல்ல ஈடுபட்ட சஞ்சையையும் அவனோட நண்பர்களையும் பிடிச்சு விசாரணை பண்ணாங்க. அதுலதான், சுதாகர் கொலைக்கான மோட்டிவ் என்னங்குறது தெரிய வந்துச்சு. திருவண்ணாமலை ஆரணி பக்கத்துல பார்வதி அகரம்-ங்குற கிராமம் இருக்கு. இங்க குடும்பத்தோட வாழ்ந்துட்டு வந்த 25 வயசான சந்துரு-ங்குற இளைஞர் குடும்ப பிரச்சணையால தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாரு. உடனே, குடும்பத்துல உள்ளவங்க சந்துருவ மீட்டு பக்கத்துல உள்ள ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனாங்க. அங்க அவர பரிசோதிச்ச மருத்துவர்கள் சந்துரு உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம், சடலத்த வீட்டுக்கு கொண்டு வந்த உறவினர்கள், சந்துருவ பிரேத பரிசோதனை பண்ணக்கூடாதுன்னு சொல்லி உடனே இறுதி சடங்குகள பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அப்போ, அங்க வந்த ஊர் நாட்டமை சுதாகர், உடல போஸ்ட் மார்ட்டம் பண்ணாம எப்படி இறுதி சடங்கு பண்ணுவீங்கன்னு கேட்டுருக்காரு. அப்போ, சந்துருவோட அண்ணன் சஞ்சையும், உறவினர்களும், சந்துருவோட சடலத்த போஸ்ட் மார்டம் பண்றதுக்கு ஒத்துக்கவே இல்ல. அதான் அவன் வேதனையில தற்கொலை பண்ணி இறந்து போயிட்டான். பேசாம அடக்கம் பண்ற வேலையவிட்டுட்டு எதுக்கு போஸ்ட் மார்டம்லாம் பண்ணனும், இறந்ததுக்கு அப்புறமும் எங்க வீட்டு பையனோட உடல வெட்டி கூறு போடுறத எங்களால தாங்கிக்க முடியாதுன்னு சென்டிமெண்ட்டா பேசிருக்காங்க. அப்ப, பிரேத பரிசோதனை பண்ணிதான் ஆகனும், ஊர் பின்பற்றிட்டு இருக்க நடைமுறைய கடைப்பிடிச்சுதான் ஆகனும்னு சொல்லிருக்காரு சுதாகர். அப்போ, சஞ்சைக்கும், சுதாகருக்கும் இடையில வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பா மாறிருச்சு.அங்க இருந்தவங்க ரெண்டு பேரையும் விலக்கி விட்டுருக்காங்க. அதுக்குப்பிறகு, சொல்ல வேண்டியத சொல்லிட்டேன், இதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்னு சொல்லிட்டு ஊர் நாட்டமை சுதாகர் அங்க இருந்து கிளம்பி போயிட்டாரு. அதுக்கப்புறம், சந்துருவுக்கு இறுதி சடங்கு நடந்துட்டு இருந்தப்ப, அங்க போலீஸ் வந்துருக்காங்க. போஸ்ட் மார்டம் பண்ணாம எப்படி இறுதி சடங்கு பண்ணுவீங்கன்னு கேட்ட போலீஸ்காரங்க, சந்துரு சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க. அதுல சந்துரு தற்கொலை தான் பண்ணிக்கிட்டாருங்குறது உறுதியானதுக்கு அப்புறம், ரெண்டு நாட்கள போஸ்ட் மார்ட்டம் பண்ண சந்துருவோட உடல உறவினர்கள்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க. அதுக்குப்பிறகு, மறுபடியும் சந்துருவுக்கு இறுதி சடங்கு பண்ணி சடலத்த ஊர்வலம் கொண்டு போனாங்க.அப்போ, சஞ்சைக்கு ஒரு ஃபோன் வந்துருக்கு. அதுல பேசுன அவனோட ஃபிரண்ட் ஒருத்தன், சந்துருவ பிரேத பரிசோதனை பண்ணி உடல கூறு போட்டதுக்கு சுதாகர் தான் காரணும்னும், அவருதான் போலீஸூக்கு தகவல் சொல்லிருக்காருன்னு சொல்லிருக்கான். அத கேட்டதும் ஆத்திரத்தோட உச்சிக்கு போன சஞ்சையும் அவனோட ஃபிரண்ட் லோகேஷும் சேந்து இறுதி ஊர்வலத்துக்கு வந்த ஊர் நாட்டாமையான சுதாகர வெறித்தனமா அடிச்சிருக்காங்க. நாங்க அவ்வளவு சொல்லியும் நீ போலீஸ்கிட்ட சொல்லி, எங்க தம்பியோட உடல கூறு போட்றதுக்கு காரணமா இருந்துருக்கன்னு கேட்டு கண்மூடித்தனமா அடிச்சிருக்காங்க. இதுல, சுதாகருக்கு தலை பகுதில பலத்த காயம் ஏற்பட்டு அதிகபடியான ரத்தம் வெளியேறுனதால பரிதாபமா உயிரிழந்துட்டாரு. ஆனா, ஊர் நாட்டமை சுதாகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கலனு சொல்லப்படுது. உண்மை என்னனு தெரியாம சஞ்சையும் அவனோட ஃபிரண்டும் சேந்து சுதாகர அடிச்சே கொன்னுருக்காங்க. சுதாகர அடிச்சு கொன்னுட்டு தலைமறைவா இருந்த சஞ்சையையும், லோகேஷையும் போலீஸ் வலைவீசு தேடிட்டு இருந்தாங்க. அப்போ, சஞ்சையும், லோகேஷும் ஆரணியில தலைமறைவா இருக்குறதா கிடைச்ச தகவல வச்சு, அங்க போனவங்க ரெண்டு பேரையும் மடக்கி பிடிச்சு விசாரிச்சதுல தான், ஊர் நாட்டமையா எதுக்காக கொலை செஞ்சாங்க அப்டிங்குறதுக்காக காரணம் தெரியவந்துச்சு. அடுத்து, ரெண்டு பேர் மேலயும் கொலை வழக்குப்பதிவு பண்ண போலீஸ் அவங்கள அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க.