தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நகரின் முக்கிய சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.