தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் வளாகத்தை சுற்றி உள்ள மதில் சுவர் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் நீச்சல் குளத்திற்கு செல்லும் பாதை சீர்குலைந்து அந்த வளாகமே தற்போது பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மதில் சுவர் சரிந்து கிடக்கும் நிலையில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதன் வீடியோ வெளியாகியுள்ளது.