திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் பயின்று வரும் நிலையில், இதனைத் தொடர்ந்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது அப்போது எதிர்பாராத விதமாக பைப் லைன் உடைந்துள்ளது. இதனால் பள்ளியில் 10 நாட்களாக குடிநீரும் வருவதில்லை சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பூட்டி வைத்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பயிலும் மாணவர்கள் மலம் கழிப்பதற்கு கூட திறந்த வெளியில் செல்லும் அவல நிலையும் உள்ளது. அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் மாணவர்கள் உட்கொள்ளும் போது குடிநீரும் இல்லை மெத்தன போக்காக செயல்படும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link ஆடுகளை குளத்தில் குளிப்பாட்டிய முன்னாள் ராணுவ வீரர்