அரபு நாடுகளில் விளையும் பேரீச்சம்பழம் போன்று, கடும் வறட்சியிலும் வெற்றிகரமாக பேரீச்சம்பழம் சாகுபடி செய்து தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி லாபம் ஈட்டி வருகிறார். அரியகுளம் கிராமத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் சவுதி அரேபியாவில் நீண்ட ஆண்டுகளாக பணிபுரிந்த பிறகு நாடு திரும்பிய பின் அரபு நாடுகளில் இருந்து பேரீச்சை கன்றுகளை இறக்குமதி செய்து சோதனை அடிப்படையில் சாகுபடி செய்து வருகிறார். இதில் பர்ரி என்ற திசு வளர்ப்பு பேரீச்சை கடும் வறட்சியையும் தாக்கு பிடித்து நல்ல மகசூல் தருவதாக கூறினார். கிலோவிற்கு 250 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்பனையாவதாகவும், தினமும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வதாகவும் கூறினார்.இதையும் படியுங்கள் : சூளகிரி அருகே நீரில் மூழ்கி இளைஞர் பலி..!