பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாட்டை தற்போது சொல்ல முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும் என்றும், அந்த தீர்வு கட்சிக்கும், நாட்டுக்கும் சரியான தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார். பாமக வலதுசாரி கட்சியாக மாறி வருவதாக திருமாவளவன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், தன்னிடம் பூதக்கண்ணாடி இல்லை எனத் தெரிவித்தார்.