மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கைது செய்ய முயன்ற சம்பவத்திற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டை REPUBLIC OF TAMILNADU என்று மாற்றி விட்டு தனித்தீவாக இருந்து விடலாமா? என கேள்வி எழுப்பினார்.