ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் பணியாளர் ஒருவர் மட்டுமே இருப்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு ஆதார் கார்டுகளை புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகை தரும் நிலையில், கூடுதல் பணியாளரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.