மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் ஐந்து கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலை தனது நிலத்தில் உள்ளதாக வழக்கறிஞர் போட்ட வேலியை பிரித்து போட்ட பொதுமக்கள், வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள வேலு. குபேந்திரன், நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவர் தனக்கு சொந்தமான இடத்துடன் சாலை புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி போட்டதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்ட நிலையில், குபேந்திரனுக்கு ஆதரவாக பேசி அத்துமீறிய வழக்கறிஞர் சங்கமித்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.