ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பரவலாக கொட்டித்தீர்த்த கனமழையால் குளிர்ச்சியாக சூழல் நிலவி வருகிறது. சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், கோவை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.