புதுக்கோட்டையில் இரு நாட்களாக பெய்த மழை காரணமாக மாவட்ட விளையாட்டு மைதானம், மலர் சந்தை, போக்குவரத்து அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. புதுக்கோட்டை நகர் பகுதிகளில் இடைவிடாது மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்க, பூ சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இருப்பினும், தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.