திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். குளம்போல் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்த விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.