ஆசிரியர் மீதான தாக்குதல் பரவலாக நடக்கிறது என்று கூற முடியாது என பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை துவக்கி வைத்த பின் பேசிய அவர், பள்ளி மாணவர்களை கையாள ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.