வரும் டிசம்பர் மாதம் வயோமித்ரா என்ற எந்திரமனிதனுடன் ஆள் இல்லாத ராக்கெட்டை அனுப்ப திட்டமிடுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ககன்யான் திட்டத்தில் 85 சதவீத சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்வதுடன், ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டால் அதில் உள்ள மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.