புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் வான வேடிக்கைகள் மற்றும் குதிரைகளின் ஆட்டத்துடன் கோயிலுக்கு சீர்கொண்டு வந்தனர். சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்களை மாலை அணிவித்து அன்போடு வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பொதுமக்கள் அவர்கள் கொண்டு வந்த சீரை ஏற்றுக்கொண்டு அமர வைத்து சிறப்பு உபசரிப்பிலும் ஈடுபட்டனர்.