கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, விநாயகர் சதுர்த்தி விழாவில் இஸ்லாமியர்களும் பங்கேற்று வழிபட்டனர். ராம்நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலவிநாயகர் பக்த மண்டலி பகுதிக்கு சென்ற இஸ்லாமியர்கள், விழா கமிட்டியினரிடம் விநாயகர் சிலைகளை வழங்கினர். தொடர்ந்து, அங்கிருந்த விநாயகரை வழிபட்டு, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு, விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் வழங்கப்பட்ட பிரசாதத்தை இஸ்லாமியர்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றனர்.இதையும் படியுங்கள் : 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது