திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி அருகே பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில், காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பாதையாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு வலி நீக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன. சில பக்தர்கள் கால்களில் மருந்துகளை தடவி இஸ்லாமியர்கள் முதலுதவியையும் அளித்தனர்.