S.I.R-க்கு எதிராக போராடும் விஜய் இறந்தவர்களின் வாக்குகளை வாங்க வேண்டுமென நினைக்கிறாரா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வினவினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக பிரச்சாரத்தில் காலனிகளை கழட்டி வீசிய கட்சியினருக்கு ஆதரவாக விஜய் செயல்படுகிறாரா? இல்லை 41 பேர் இறப்பின் மீது ஏறி வந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா? என அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தார்.