மாவட்ட SP அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் போதிய குடிநீர் இல்லாததால் மக்கள் கடும் அவதி புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்ற முதல் நாளில் இந்த அவல நிலை என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் குறைதீர் கூட்டத்தில் சலசலப்புராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மீதான புகார் மனுக்களை காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.கூட்டத்தில் குடிக்க நீர் இன்றி தவித்த பொதுமக்கள்இந்த நிலையில் குறைதீர்வு நாள் கூட்டம் என்பதால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வரவேற்பு இடத்தில் காவல்துறை அதிகாரிகள் போதிய குடிநீர் போன்ற அடிப்படை வசதியின்றி இருந்ததாகவும், மனு அளிக்க வந்த பொதுமக்கள் குடிக்க தண்ண்டிர் இன்றி கடுமையாக அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் அங்குள்ள கேண்டீன் போன்ற வசதிகள் இன்றி அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீர் குடிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.குடிநீரை மறந்து விட்டார்களா?இதனிடையே இன்று புதியதாக செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் "சிபின்" பணி மாறுதல் செய்யப்பட்டு இன்று முதல் பதவி ஏற்று கொண்ட நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மனு அளிக்க வந்த மக்கள் கடுமையாக அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்று கொண்ட பணிகளில் இருந்து குடிநீரை மறந்து விட்டார்களா? அல்லது இது வழக்கமான ஒன்றா? என்ற தற்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றணர். Related Link நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு