முருகனும், சிவனும் இந்துக் கடவுளா? சைவக் கடவுளா? என சர்ச்சையான கேள்வி எழுப்பிய சீமான், அயோத்தியில் ராமர், ஒரிசாவில் பூரி ஜெகநாதர் வரிசையில் தமிழகத்தில் முருகனை வைத்து அரசியல் செய்வதாக விமர்சித்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்போதும் விமர்சித்து வந்த நிலையில், திடீரென அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? என்றும் விளக்கம் அளித்துள்ளார்.