நீலகிரி மாவட்டம் தேவாலா கிராமத்தில் அரசு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தலா 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்படும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவில் விடுகள் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.