வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பள்ளி மாணவன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பேரணாம்பட்டு அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பரத்குமார் என்ற இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் இரும்பு ராடால் தாக்கினர். பரத்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், தாக்குதல் நடத்தியவர்களை மடக்கி பிடித்து மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தலையில் காயமடைந்த பரத்குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.