நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கு தொடர்பாக, அவரது பெற்றோரிடம் தேசிய பட்டியலின ஆணைய தலைவர் விசாரணை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியரான கவின், மாற்றுச் சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, அப்பெண்ணின் சகோதரனால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், நெல்லைக்கு வருகை தந்து தேசிய பட்டியலினம் மற்றும் பழங்குடியின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா மற்றும் உறுப்பினர்கள் ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவினின் பெற்றோரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்ததாக கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.