தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நிதி மோசடியான நியோமேக்ஸ் வழக்கை விசாரித்து வந்த மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி மனிஷா திடீரென மாற்றப்பட்டுள்ளார். பணம் இரட்டிப்பு என்ற பெயரில் மோசடி செய்ததாக, நியோமேக்ஸ் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக 2022-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 752 வங்கிக் கணக்குகளில் இருந்து 17 கோடியே 25 லட்ச ரூபாய் மற்றும் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கினர். இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மனிஷா மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பியிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது.