விசாரணை கைதிகளின் பற்களை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் புடுங்கிய விவகாரத்தில், அமுதா ஐஏஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர இருப்பதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார். வழக்கின் விசாரணை முடித்து பல மாதங்கள் ஆகியும் விசாரணை அறிக்கையை இதுவரை அமுதா வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.