தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்தஊர்களுக்கு மக்கள் படையெடுத்தால் புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.