இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 4 லட்சம் பேர் பயனுடைந்துள்ளதாகவும், அதற்காக தமிழக அரசு சார்பில் 365 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். சாலை விபத்தில் சிக்கி சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நபரை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சைக்கான தொகை அளிக்கப்படும் என உறுதியளித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறினார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலம் மற்றும் வெளிநாட்டவர்கள் சுற்றுலா வரும் பொழுது சாலை விபத்தில் சிக்கினால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்தில் அரசின் சார்பில் இத்திட்டத்தின் மூலம் 2 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.