தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலைசுற்றல் பிரச்சனையை துல்லியமாக கண்டறிய கூடிய வீடியோ நிஸ்டாக்மோகிராபி சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கண் அசைவுகள் மூலம் தலைச்சுற்றலுக்கான காரணத்தை கண்டறியும் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.