நீலகிரி மாவட்டம் ஊட்டியில் படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Leisure படகு சவாரி சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லைசர் படகு என அழைக்கப்படும் ஓய்வு படகு சவாரி, ஊட்டி சுற்றுலா ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்வோருக்கு சுடச்சுட டீ, பிஸ்கட், நொறுக்கு தீனிகள் சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது.