சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஐபிஎல் போட்டி நடைபெறும் சமயத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், மைதானத்தில் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும், சென்னை சிங்கம் ஐபிஎல் என்ற செயலியை உருவாக்கி இருப்பதாக அவர் கூறினார்.