கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெட்ரோல் பங்கில் போதை இளைஞர்கள் சிலர் தீபாவளிக்கு மாமூல் கேட்டு அங்கிருந்த ஊழியரை தாக்கிய நிலையில், அதன் CCTV காட்சி வெளியாகியுள்ளது. வெள்ளப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு இரவில் வந்த நான்கு பேர் அங்கு பணியில் இருந்த இன்பரசு என்பவரிடம் தீபாவளிக்கு பணம் தருமாறு கூறி தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பேரும் பெட்ரோல் பங்க் ஊழியரை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.