திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் அருகே மேப்பலம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் கடந்த நான்கு வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவு 11:50 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக மூன்று இளைஞர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தனர். ஏற்கனவே போதையில் இருந்த மூன்று இளைஞர்களும் தாங்கள் கொண்டு வந்த கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறிய போது, பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப முடியாது என்று கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா, தீயணைக்கும் கருவி, ஸ்விட்ச் போர்டு, நாற்காலிகள், பாதுகாப்பு கருவி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி பெட்ரோல் பங்க்கை சூறையாடினர். தடுக்க முயன்ற பெட்ரோல் பங்க் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர் இதனால் ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது . இதை தொடர்ந்து அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பெட்ரோல் பங்கை நள்ளிரவில் சேதப்படுத்தும் இளைஞர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. Related Link இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை கடித்த வெறிநாய்