சிவகங்கை பேருந்து நிலையத்தில் நடத்துனரை தாக்கி பணப்பையை பிடுங்கி எறிந்த போதை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் புறப்பட்ட பேருந்தில் குடிபோதையில் காரியாபட்டியை சேர்ந்த சிவமணி என்பவர் ஏறியுள்ளார்.அப்போது, நடத்துனர் பாண்டி, இது ஒன் டூ ஒன் பேருந்து என்பதால் இடையில் நிற்காது என்று சொன்னதும், போதை ஆசாமி சிவமணி, நடத்துனரை தாக்கியதோடு, பணப்பையை பிடுங்கி எறிந்துள்ளார்.இதையடுத்து, சிவமணியை பிடித்த பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.