2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, என்னால் ஜோசியமெல்லாம் சொல்ல முடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார்.