நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முதன்மைக் கல்வி அதிகாரிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு மீண்டும் இளநிலை உதவியாளர் பணி வழங்கவில்லை எனக்கூறி, சின்னமனூரை சேர்ந்த பாலகுமரன் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணிக்கு 2 மாதம் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி பிறப்பித்த பணி உயர்வு தொடர்பான உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.