விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் வேல்ஸ், SRM பல்கலைக்கழக அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றனர். தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 அணிகளும் பங்கேற்றன. இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் ஈரோடு பி.கே.ஆர் கல்லூரி அணியை வீழ்த்தி வேல்ஸ் பல்கலைக்கழக அணியும், ஆண்கள் பிரிவில் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி அணியை வீழ்த்தி SRM பல்கலைக்கழக அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு விருதுநகர் மாவட்ட SP கண்ணன் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.