பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை பேணி காப்பதற்காக, கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதையை மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சுகு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தார். இந்நிலையில் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அண்மை காலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தண்ணீரு உத்தரவின் பேரில் அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.