வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து 3 நாளாக வனத்துறையினர் அருவியில் குளிக்கத் தடை விதித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை, ஊத்து, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.