நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சோதனை சாவடியில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறை என்பதால் கண்காணிப்பு பணிகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக, கேரள எல்லையில் தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.