நீலகிரி மாவட்டம் உதகை அருகே கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் கண்காணிப்பு தானியங்கி கேமராக்கள் பொறுத்தப்பட்டு புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கல்லக்கொரை மந்து பகுதியை சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவரை புதன்கிழமை புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணித்து வருவதாகவும், 30 பேர் கொண்ட 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.