சேலம் மாவட்டத்தில் உள்ள நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.திருச்சியில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக சேலத்தில் உள்ள நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காலாவதியான உணவு பொருட்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தனர்.