சிவகங்கையில் உள்ள வாரச்சந்தையில் உள்ள மீன்கள் விற்பனை கடைகளில், மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மீன் கடைகளில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மீன்களை எடுத்து கெட்டுபோகாமல் உள்ளதா? என அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், சில கடைகளில் கெட்டுப்போன நிலையில் இருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து, அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.