வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னையில் நடைபெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக, விருகம்பாக்கம் கால்வாய் கூவம் ஆற்றில் இணையும் பகுதி மற்றும் கூவம் ஆறு கடலில் கலக்கும் முகத் துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.