ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பாதை வசதி ஏற்படுத்தித்தரக் கோரி, அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மொசக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர், சில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று வந்தனர். தற்போது அந்த பாதை அடைக்கப்பட்டதால் செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர்.