கடன் நிலுவை தொகையான 5 கோடி ரூபாயை வசூலிக்காத திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமாங்குடியை சேர்ந்த கூட்டுறவு வங்கி செயலாளர் வெங்கடேசன் கடந்த 2000ஆம் ஆண்டு முன்பு கொடுக்கப்பட்ட வீட்டு அடமான கடன் உள்ளிட்டவற்றை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியும் வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி பரிந்துரை செய்ததன் பேரில் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : வேளாண்மை உதவி இயக்குநர், உதவி அலுவலர் பணியிடங்கள்... திருவாரூரில் 8 வட்டாரங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள்