இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படாததால், தற்போது வரை வகுப்புகள் துவங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், தமிழகம் முழுவதும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களும், ஆசிரியர்களுக்கு கை நகலும் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டபோது, விரைவில் நோட்டு, புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.